தேன் – 38

அவரவர்களுக்கு அவர்கள் கவலை என்பது போல், நேரமும், காலமும் யாருக்கும் காத்திருக்காமல் சரசரவென்று ஓட, அன்று காலையில் கவியும், விழியும் வேந்தனுடைய கட்சி ஆபிஸ் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தனர்.

“ச் என்னப் பண்ணிட்டிருக்க கவி? இதெல்லாம் சரியா வருமா? நீ அங்க வேல பாக்கிறது யாருக்காச்சும் தெரிஞ்சா, அவருக்குத்தான பிரச்சன வரும்” என்று யோசித்தப்படியே தலையை சீவிக் கொண்டிருந்தாள்.

“இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருக்கப் போற. அங்க குட்டிமா உனக்காக வெயிட் பண்ணிட்டிருக்கா” என்றப்படி வந்த வேந்தன், அவளிடம் அனுமதி கேட்காது அவள் தலையில் கொண்டு வந்த ரோஜாவை வைத்து விட்டான்.

அவனின் செயலில், “ச் என்னப் பண்றீங்க?” என்று கோவமாய் திரும்ப, அவனோ, “அட ஆமால்ல தப்பு பண்ணிட்டேன்” என்றான்.

அதில் இவளோ அவனை சந்தேகமாய் பார்க்க, “ஆமா ரோஜாப்பூவ கையில தான் கொடுக்கனும் இல்ல. சரி விடு. நான் வேணும்னா தலையில இருந்து எடுத்து கையில கொடுக்கிறேன்” என்றப்படி அவள் தலையில் வைத்த பூவை எடுக்க சென்றான்.

அவனின் செயலில் பதறி எழுந்தவள், “தலையில வச்சத எதுக்கு எடுக்கப் போறீங்க?” என்று கோவமாய் கேட்டாள். “உனக்குத்தான் பிடிக்கலையே” என்று இவன் நக்கலாய் சொல்ல, “ஆமா எனக்கு பிடிக்காத எதையுமே நீங்க பன்ணது இல்ல பாருங்க” என்று அவள் கடுப்பாய் சொல்ல, அவனோ, “உனக்கு வேண்டியதத்தான் நான் பண்றேன்” என்றான்.

அதில் அவனை முறைத்தவளோ, “இங்கப்பாருங்க சார். இப்பவே சொல்லிட்டேன். அங்க நான் ஒரு எம்பிளாயியா மட்டும் தான் இருப்பேன். ஈவன் நீங்க வேற எதையும் சொல்லக் கூடாது” என்றாள்.

“என்ன சொல்லக் கூடாது?” என்று இவன் அசராது கேட்க, “ச் இதுக்குத்தான் நான் எங்கேயும் வேலைக்கு வரலன்னு சொன்னேன்” என்றாள்.

“சரி சரி. இப்போ என்ன? அங்க இருக்கிறவங்க கிட்ட, நான் உன்னோட புருஷன்னு சொல்லக் கூடாது. அதான?” என்றான்.

“ஆமா” என்று அவள் சொல்ல, அதில் அவளையே பார்த்தவன், “நானா சொல்ல மாட்டேன். பட் நீ சொல்லனும்னு ஆசைப்பட்டா தாராளமா சொல்லலாம். அத நான் தடுக்க மாட்டேன்” என்றான்.

“ச் நான் ஏன் சொல்லப் போறேன். அதெல்லாம் ஒரு நாளும் நடக்காது” என்று அவள் சொல்ல, “அப்புறம் உன் இஷ்டம்” என்றவன், அங்கிருந்த வாட்சை எடுத்து கட்டினான்.

அப்போதும் கவி அங்கேயே நின்றிருக்க, “இன்னும் உனக்கு என்ன பிரச்சன? அதான் நீ சொன்னதுக்குலாம் சரி சொல்லிட்டேன் தான?” என்று ஒரு வித எரிச்சலுடன் கேட்டான்.

அதில் அவளோ, “அவசியமா நான் வரனுமா?” என்று முதலில் இருந்து ஆரம்பிக்க, இவனுக்கோ மண்டை சூடானது.

அதில் மூச்சை உள்ளிழுத்து, தன் கோவத்தை கட்டுப்படுத்தி, “உனக்கு வேலைக்கு போறதுல பிரச்சனையா? இல்ல என்கூட வேலை பார்க்க வர்றது பிரச்சனையா?” என்றான்.

“ரெண்டும் தான்” என்று அவள் சொல்ல, அதில் அவளை முறைத்தவனோ, “இங்கப்பாரு. குட்டிமா என்கிட்ட கேட்டு ஒரு விஷயத்த நான் செய்யாம இருந்தது கிடையாது. அவளுக்கு உன் கூட வேல பாக்கனும்னு ஆச. அத என்னால மறுக்க முடியாது. சோ நீ வந்துத்தான் ஆகனும்” என்று கோவமாய் கூறினான்.

அதில் அவனைப் பார்த்தவளோ, “உண்மையாவே அவளுக்கு, இந்த வேல மேல விருப்பம் இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்களா?” என்றாள்.

“என் தங்கச்சி என்கிட்ட பொய் சொல்ல மாட்டா. அவளுக்கு இதுத்தான் விருப்பம்” என்று அவன் சொல்ல, அதற்கு மேல் எதுவும் சொல்லாது அவள் அந்த அறையை விட்டு வெளியில் சென்றாள்.

வெளியில் செல்பவளைப் பார்த்தவனோ, “ஸ்ப்பா, உன் கூட வேல பாக்க வைக்கவே, உனக்கு இவ்வளவு டயர்டாகுது. இதுல உன் கூட அவள வாழ வைக்க முடியும்னு நினைக்கிறீயா?” என்று தனக்குத் தானே சொல்லியப்படி வெளியில் வந்தான்.

அங்கே விழி ஸ்கூட்டியில் கவிக்காக காத்திருக்க, அதைப் பார்த்த வேந்தனோ, “உங்களுக்கு கார் ஏற்பாடு பண்ண சொல்லிருந்தேன்னே” என்றான்.

“அண்ணா. டூவீலர் தானா கம்பர்டபிள்ளா இருக்கும்” என்று விழி சொல்ல. “ஆனா” என்றவன் ஒரு நொடி யோசித்து பின், “சரிடா. பாத்து கவனம். அருளுகிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன். நீங்க போங்க. எனக்கு தொகுதியில கொஞ்சம் வேல இருக்கு முடிச்சிட்டு வரேன்” என்றப்படி தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான் வேந்தன்.

கவியோ, “ஏண்டி நீ மட்டும் போ வேண்டியதுத்தான?” என்று சொல்ல, “உன்ன விட்டுட்டுலாம் போ முடியாது. சோ வந்து வண்டியில ஏறு. இல்லையா நீ வந்து ஸ்கூட்டிய ஸ்டார்ட் பண்ணு” என்றாள்.

அதில் எதுவும் சொல்லாது விழியின் பின்னே ஏறி அமர, கண்ணாடி வழியே அவள் தலையில் இருந்த ஒற்றை ரோஜாவைப் பார்த்து சிரித்தாள்.

“இப்போ எதுக்கு சிரிக்கிற?” என்று கவி கேட்க, “இல்ல சீக்கிரமே நம்ம வீட்டுக்கு ஒரு ரோஜா செடி வரப் போறத நினைச்சி சிரிச்சேன்” என்றாள்.

“என்ன சொல்ற நீ?” என்று குழப்பமாய் கவி கேட்க, “இல்ல. ரோஜா அழகா இருக்குன்னு சொன்னேன்” என்றப்படி பைக்கை ஸ்டார்ட் செய்தாள்.

அப்போதே கவியும் மெதுவாய் அந்த ரோஜாவை தொட்டு வருட, வேந்தன் அவள் தலையில் வைத்து விட்ட நிகழ்வு வந்து மறைந்தது.

“ச் இவரு எதுக்கு இப்போ இப்படி எல்லாம் பண்றாரு?” என்று தனக்குள் சொல்ல, “அதுக்கு நீ ஏன் அலோ பண்ற?” என்று அவளின் மனம் எதிர்கேள்வி கேட்டது.

இவர்கள் வேந்தனின் கட்சி அலுவலகத்தை நோக்கி செல்ல, அவர்கள் செல்லும் வழியில் இருந்த இருபது மாடி கண்ணாடி கட்டிடத்தினை கவி ஆச்சர்யமாய் பார்த்தாள்.

அங்கே அந்த கட்டிடத்திற்குள் இருந்த ஒருவனோ, அத்தனை கோவமாய், அவனுக்கு கீழே வேலைப் பார்ப்பவர்களை திட்டிக் கொண்டிருந்தான்.

“ரீசன் சொல்லிட்டே இருக்கிறதுக்காக, உங்கள ஒன்னும் வேலைக்கு வைக்கல. இங்க நான் கொடுக்கிற சம்பளம், நீங்க பார்க்கிற வேலைக்காக மட்டும் கிடையாது. இந்த கம்பெனிக்கு நீங்க எபெக்ட் போடனும்ன்றதுக்காகத்தான். எந்த பத்திரிக்கை ஆபிஸ்லையும், நான் கொடுக்கிற சம்பளத்த கொடுக்க மாட்டாங்க. அப்படி இருந்தும் நான் கொடுக்கிறேன். பட் அதுக்கான சின்ன வேல கூட இங்க நடக்கல” என்று கத்தினான்.

அதில் சுற்றி இருந்தவர்கள் அத்தனைப் பேரும் நடுங்க, அவனோ, “டி ஆர் பிக்காக மட்டுமே சேனல் நடத்துறதா இருந்தா, நான் நியூஸ் சேனல் இல்ல, எண்டர்டெயின்மெண்ட் சேனல் ஓபன் பண்ணியிருப்பேன்னே. அதத்தாண்டி, இந்த சேனல் மேல, மக்களுக்கு இருக்கிற நம்பிக்கத்தான் நம்ம சேனல் பிளஸ். ஆனா அத நீங்க ஒரு விளம்பரத்துக்காக கெடுத்து வச்சிருக்கீங்க” என்று கத்தினான்.

“இல்ல சார். அது ஒரு ட்ரெண்டிங்காகத்தான்” என்று சீனியர் ரிப்போர்டர் ஒருவர் சொல்ல, அதில் கண்கள் சிவக்க, “நம்ம வேணும்னா ஆபிஸ் டூர்னு ஒன்னு ஆரம்பிப்போம்மா? ஏன்னா யூடியூப்ல இப்போ அதெல்லாம் ட்ரெண்ட்லத்தான போது. நீங்க ரெண்டு பேரும் என்னப் பண்றீங்க? நீயூஸ கவர் பண்றதுக்கு பதிலா, ரீசண்டா வந்த ட்ரெண்டிங் ஷாங்குக்கு டான்ஸ் ஆடுங்க. அப்புறம் நீங்க. அத கரெக்டா கேப்சர்பண்ணி, எடிட்டர் கிட்ட கொடுத்திருங்க. அவரு அத பக்காவா எடிட் பண்ணி, நம்ம சேனல்ல போட்டுடலாம்” என்று கூறினான் அவன்.

அதில் மற்றவர்காள் பயந்து நடுங்க, “இரிட்டேட்டிங் இடியட்ஸ். நீயூஸ் சேனல்ல, நியூஸ் ட்ரெண்டிங்கா இருக்கனுமே தவிர, கிரிஞ்சிங் நியூஸ் கிடையாது” என்று முன்னே இருந்த டேபிள் வெயிட்டை தூங்கி எறிந்தான்.

அது சரியாக, அங்கிருந்த கண்ணாடி சுவற்றின் மீது பட்டு விழ, நல்ல வேளையாக அத்தனையும் பைபர் கிளாஸ் என்பதால், அதற்கு சேதாரம் ஆக வில்லை. ஆனால் சுற்றி இருந்த அத்தனைப் பேருக்கும் தான் உயிர் போய் உயிர் வந்தது.

“இனிமே இப்படி நடக்காது சார்” என்று அவர்கள் கெஞ்சி கேட்க, “திஸ் இஸ் தி பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட். எனக்கு எல்லாத்தையும் விட என்னோட ரெபிடேசன்தான் முக்கியம். அத புரிஞ்சு வேல பாருங்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் அந்த ஒருவன்.

அதே நேரம் இங்கே வேந்தனுடைய கட்சி ஆபிஸைப் பார்த்த கவியும், விழியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அதற்குள்ளாக அங்கு வந்த அருளோ, “வாங்க மேடம். உள்ள போலாம்” என்று அழைக்க, “என்னது அருள் இதெல்லாம்?” என்று அங்கே சுற்றி நின்றிருந்தவர்களைப் பார்த்து கேட்டாள்.

“அது, ஆபிஸ்ல கொஞ்சம் தண்ணி பிரச்சன அதான். நீங்க வாங்க” என்று அவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல, ஆபிஸோ அந்த கால கட்டிடம் தான். ஏதோ பழைய எல் ஐ சி ஆபிஸுக்குள் நுழைந்தது போல் இருந்தது.

கிட்ட தட்ட பத்து பேர் தான் அங்கு வேலைப் பார்ப்பார்கள். அதிலும் பாதி பேர் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் தான். ஒரு மூன்று கம்ப்யூட்டர் இருந்தது. தனி தனி அறை என்றெல்லாம் இல்லை.

அனைவருமே பேப்பர், பேனா என்று கவர்ன்மெண்ட் அலுவலகம் எப்படி இருக்குமோ? அப்படித்தான் இருந்தது. பற்றாக்குறைக்கு தொண்டர்கள் என்ற பெயரில் வேஷ்டி சட்டையில் சில பேர் அமர்ந்திருந்தனர்.

இதை எல்லாம் பார்த்தப்படி வேந்தனுடைய அறைக்கு இருவரும் சென்றனர். அதற்குள் ஒரு சிறிய தடுப்பு போல் இருக்க, அதற்கு மறு பக்கம் தான் இவர்கள் இருவரும் வேலைப் பார்க்க அறை போல் இரண்டு டேபிள், கம்ப்யூட்டரை போட்டு ஏற்பாடு செய்திருந்தனர்.

கவியோ வேந்தனுடைய அறையைத் தான் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். தேச தலைவர்களின் புகைப்படமும், கட்சி தலைவர்களின் புகைப்படமும் வரிசையாய் மாட்டப்பட்டிருக்க, அதில் நடு நாயகமாய் வேந்தனுடைய புகைப்படமும் மாட்டப்பட்டிருந்தது.

சட்ட மன்ற உறுப்பினர். எம் சுடர் வேந்தன் என்ற பெயர் பலகையும் கவியின் பார்வையில் விழ அதையேத்தான் இமைக்க மறந்து பார்த்தாள்.

அதற்குள்ளாக விழியோ, “எங்க ரூம் எங்க இருக்கு?” என்று கேட்க, அதில் அருளோ, “அதெல்லாம் நேத்தே ஏற்பாடு பண்னிட்டேன்” என்று மறு பக்கம் அழைத்து சென்றான்.

அதைப் பார்த்த விழியோ, “கவிக்கு இந்த கேபின் ஒகே. எனக்கு எங்க?” என்றாள்.

அதில் தன் தோழியை முறைத்தவளோ, “நீ என்ன கார்பரேட் கம்பெனிக்கா வேலைக்கு வந்திருக்கா? கட்சி ஆபிஸ் இப்படித்தான் இருக்கும். இதுக்குத்தான் இதெல்லாம் வேண்டாம்னு சொன்னேன். நீ கேட்டீயா? பாரீன்ல போயி படிச்சிட்டு வந்தது, இங்க வந்து பேப்பர் அடுக்கிறதுக்குத்தானா?” என்று கோவமாய் கேட்டாள்.

அதில் விழியோ அருளைப் பார்க்க, அவனோ, “சரி நீங்க பேசிட்டு இருங்க. உங்களுக்கு குடிக்க ஏதாச்சும் எடுத்துட்டு வரேன்” என்று அங்கிருந்து சென்றான்.

அவன் சென்றதும், விழியோ கவியைப் பார்த்து, “ஏன் கவி? உனக்கு இந்த ஆபிஸ் பிடிக்கலையா? இங்க வேல பாக்கிறத கெளரவ குறைச்சலா நினைக்கிறீயா?” என்றாள்.

அதில் இன்னும் இன்னும் விழியை முறைத்தவளோ, “லூசா நீ? நான் உனக்கு சொல்லிட்டு இருக்கேன். எனக்குலாம் ரோட்டுல நின்னு பாக்குற வேல கூட குறைச்சல் கிடையாது. ஏன்னா இத விட மோசமான இடத்துல எல்லாம் நான் இருந்திருக்கேன். ஆனா உனக்கென்னடி வந்திச்சு?” என்று கோவமாய் கேட்டாள்.

“ஹேய் அண்ணாவே இங்கத்தான் இருக்காங்க. அப்புறம் எனக்கென்ன? எனக்கு இந்த ஆபிஸ் ரொம்ப பிடிச்சிருக்கு. ஒரு மாதிரி எயிட்டீஸ் ஸ்டைல்ல, இதுவும் ஒரு மாதிரி ஹிக்காத்தான் இருக்கு. வாயேன் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு செல்பி எடுத்துக்கலாம்” என்றவள் கவியையும் இழுத்து போட்டோ எடுத்தாள். அதில் கெஸ்ட் அப்பியரன்சாக, வேந்தனுடைய புகைப்படமும் இருவருக்கும் இடையில் தெரிந்தது.

(அடுத்து என்னாகப் போது? அப்படின்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்னிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   1

*** தேன் – 38 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***