இரு கண்கள் விழியையே, அளந்துக் கொண்டிருக்க, விழியோ சிறு உறுத்தல் கூட தோன்றாது, அந்த கோவில் சுவற்றை எல்லாம் இஞ்ச் பை இஞ்சாக அளந்துக் கொண்டிருந்தாள்.
“இவங்களுக்கு ஸ்பேஸ் கொடுக்கலாம்னு நம்ம முன்னாடி வந்தா, இப்படி இவ்ளோ போர் அடிக்குது” என்று தனக்குள்ளே சொல்லியப்படி அந்த கோவிலைத்தான் அளந்துக் கொண்டிருந்தாள்.
அதற்குள் கவியோ, “ச் எங்கப் போன நீ?” என்று அவளுடன் கலந்துக் கொண்டாள். இப்போது விழியை அளந்துக் கொண்டிருந்த அந்த இரு கண்களோ, இப்போது அதே ஆர்வத்துடன் கவியையும் பார்த்தது. அதே பார்வைத்தான். ஆனால் விழிக்கு தோன்றாதது, இப்போது கவிக்கு என்னமோ போல் தோன்ற, சட்டென்று சுற்றி முற்றிப் பார்த்தாள்.
அதற்குள் விழியோ, “நீ ஏன் கேட்க மாட்ட. சும்மா கோவிலுக்கு போகனும்னு சொல்லிட்டு, இப்படி வந்து வருடக் கணக்கான வேண்டுதல்ல மொத்தமா வச்சிட்டு நின்னன்னா, நான் அங்கேயேவா தூங்க முடியும்?” என்று கிண்டலாய் கேட்டாள்.
அதில் கவி விழியை முறைக்க, அதற்குள் வேந்தனும் அவர்களுடன் வந்து நின்றான். அவ்வளவுத்தான் அத்தனை நேரம் ஒரு வித ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வை, இப்போது வேந்தனின் மீது நெருப்பாய் விழுந்தது. அந்த பார்வையில் அப்படி ஒரு கோவம். அப்படி ஒரு வெறுப்பு. கொஞ்சம் விட்டால் இப்போதே கத்தியால் குத்தி கொன்று விடும் வேகம் அவனுக்கு.
வேந்தனோ கவியை மட்டுமே பார்த்திருக்க, அவள் பார்வை அங்கும், இங்கும் அலை மோதுவதைப் பார்த்தவன், “என்னாச்சு?” என்றான். அதில், அவளுக்கு என்ன தோன்றியதோ, அவன் கையைப் பிடித்து அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள். அவளுக்குள் ஒரு வித அலைப்புறுதல். ஏனோ கவி வேந்தனின் கைக்குள் அடங்கி நிற்பதை பார்த்த அவனுக்கோ, இன்னும் இன்னும் வேந்தனின் மீது கோவம் கூடியது. அவனுடைய கண்கள் நெருப்பைக் கக்கியது.
அந்த பார்வைக்கு சொந்தக்காரனுடைய அந்த கொலைவெறி, கவிக்கு மிகப்பெரிய அச்சத்தை கொடுத்தது.
கவியின் செயலைப் பார்த்த வேந்தனோ, மீண்டும் அந்த கோவிலை சுற்றி பார்வையை படரவிட்டான். அவன் பார்வையில் விழாதவாறு, அங்கிருந்த தூணின் பின்னே மறைந்தவன் மனமோ, இன்னும் இன்னும் கோவத்தில் கொதித்தது.
“சீக்கிரமே உன் கண்ணு முன்னாடி வருவேன். நான் வர்றப்ப, உன் முகத்துல இப்ப இருக்கிற அந்த சந்தோஷம் இருக்காது” என்று தனக்குள்ளே அழுத்தமாய் சொல்லிக் கொண்டான்.
இங்கே வேந்தனோ ஏதோ தோன்ற, கவியிடம் இருந்து விலகி நகர முயற்சித்தான். ஆனால் அதற்குள் அவன் கைச்சட்டையை மேலும் முறுக்கிப் பிடித்தவள், “எங்கப் போறீங்க?” என்றாள்.
அதில் அவனோ, “நில்லு இப்போ வந்துடுறேன்” என்றப்படி விலக முயற்சிக்க,
ம்ஹூம்” என்று அவன் கையை விடாதுப் பிடித்தாள். அதில் அவனோ, அவள் முன் குனிந்து, “இங்கப்பாரு இதுக்கு முன்னாடி, நீ பயந்திருக்கலாம். ஆனா இப்போ நீ இந்த வேந்தனோட பொண்டாட்டி. அத மனசுல வச்சுக்கோ. யாரு என்ன சொன்னாலும், எதிர்த்து நின்னு பதில் பேசு. இல்லையா? என்கிட்டையாச்சும் வந்து சொல்லு. நீ குனிஞ்சிட்டே இருந்தா, அது எனக்குத்தேன் அவமானம்” என்றான் வேந்தன்.
அதில் இப்போது இவளோ மூக்கு விடைக்க, “இதுக்குத்தான் என்ன விட்டுட்டு வேற ஏதாச்சும் நல்லப் பொண்ண கட்டிக்கோ” என்று சொல்லி முடிக்கும் முன்னே, அவள் வாயை தன் கரத்தால் அழுத்தி மூடியவன், “கோவிலுன்னு கூட பாக்க மாட்டேன். இன்னும் ஒரு வார்த்த பேசுன, இப்படி கையால இல்ல. வேற வழியில உன் வாய அடைக்க வேண்டி வரும். எப்படி வசதி?” என்று கேட்டப்படியே தன் கரத்தை விலக்கினான்.
அவனின் பேச்சில், இங்கே இவளோ அதிர்ந்து, “ச் தங்கச்சி முன்னாடி இப்படித்தான் பேசுவீங்களா?” என்று கோவமாய் கேட்டாள். “என் பொண்டாட்டிக்கிட்டத்தான பேசுறேன்” என்றான்.
“பொண்டாட்டினாலும், இப்படித்தான் வரம்பு இல்லாம பேசுவீங்களா?” என்று மூக்கு சிவக்க அவள் கேட்க, “பொண்டாட்டிக்கிட்ட என்னடி வரம்பு வேண்டிக் கெடக்கு. அதுவும் இந்த வேந்தனுக்கு, எந்த வரம்பும் கிடையாது” என்றான்.
அதில் அவனை இன்னும் இன்னும் முறைத்தவள், “இருக்கனும். உங்களுக்காக இல்லாட்டியும், உங்க தங்கச்சிக்காக, நீங்க வர முற பாக்கத்தான் வேணும். அதுவும் போக, நீங்க ஒரு எம் எல் ஏ. பதவிக்கு ஏத்த மாதிரித்தான் பொது இடத்துல நடந்துக்கனும்” என்று கிட்ட தட்ட கட்டளையாய் கூறினாள்.
“எதுடி பொது இடம்? இதுவா?” என்றவன் அவள் இடையோரம் கைக் கொடுத்து தன்னோடு சேர்த்துப் பிடிக்க, அவனின் செயலில், “ஐயோ, என்னப் பண்றீங்க சுடர்? விடுங்க” என்று அவன் கைப் பிடியில் இருந்து விலக முயற்சித்தாள்.
ஆனால் அவனோ விடாது, அவள் இதழ் உரசும் தூரம் நெருங்கி, “இது என் இடம். என்னிக்குமே என் இடம் தான்” என்றான். அவன் கண்ணில் அப்படி ஒரு அழுத்தம். ஆனால் இப்போது இவளுக்கோ ஒரு வித வலி.
“ஆனா அந்த இடத்த ஏற்கனவே வேற ஒருத்தன்” என்றவள் என்ன சொல்லியிருப்பாளோ? அதற்குள்ளாக, அவள் இதழை தன் இதழால் மூடியிருந்தான். கோவில் தான். அவனுக்கும் தெரிந்துத்தான் இருந்தது. ஆனால், ஏனோ அவனின் மனைவி அங்கு நின்று கண்ட நாயைப் பற்றி பேசுவதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
கோவம். கோவம். கோவம் மட்டுமே அவன் கண்கள் அத்தனை சிவந்தது. இங்கே இவள் கண்களிலோ கன்ணீர் சிந்தியது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு வேண்டும் என்றால், அது முத்தமாக தெரியலாம். ஆனால் அது இரு இதயம் சத்தமின்றி இரத்தம் சிந்திக் கொண்ட நிகழ்வு.
முழுதாய் முழு நிமிடத்தை தொட்டு, பின் மெதுவாய் அவள் இதழை விட்டு விலகியவன், “கண்ட நாய் நடுவுல வந்திச்சின்றதுக்காக, எனக்கு சொந்தமான பொருள தூக்கிப் போட நான் ஒன்னும் முட்டாள் கிடையாது. எனக்கு சொந்தமானது என்னிக்கா இருந்தாலும், அது எனக்குத்தான் சொந்தம். இப்போ நீ எனக்கு சொந்தம். இதுக்கப்புறம் எனக்கு மட்டும் தான் சொந்தம். இன்னொரு தடவ எந்த தெரு நாயைப் பத்தினாலும், உன் வாயில இருந்து வந்திச்சு? அதுக்கப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்” என்றான்.
அவனுடைய கோவத்தில் இவளுக்கு மூச்சடைத்தது. அதே நேரம் அவளுக்கு ஒரு வித ஆற்றாமையும் சேர்ந்தே வந்தது. அந்த நொடியில் தன்னிலை மறந்தாள். அவனின் மீதுத்தான் தன் கோவத்தை காட்டுவேன் என்று வரம் வாங்கி வந்தாளோ என்னவோ?
“ஏன்யா. என்ன விட்டுட்டு போன? நான் சொன்னா, என்ன விட்டுட்டு போயிடுவீயா நீ? இப்போ வந்து இவ்ளோ பேசுறீயே, அன்னிக்கு ஒரு அற விட்டு என்ன தூக்கிட்டு போயிருந்தன்னா, எனக்கு இந்த நிலம வந்திருக்குமா? ஏன்யா நீ அத பண்ணல?” என்று அவன் சட்டையை கொத்தாய் பிடித்துக் கேட்டாள்.
அவளின் எந்த கேள்விக்கும் அவனிடம் பதில் இல்லை. உண்மைத்தானே, இதைத்தானே அவன் அன்றே செய்திருக்க வேண்டும். அப்படி அவன் செய்திருந்தால், இன்று இவள் இத்தனை கூனி குறுகி நின்றிருக்க மாட்டாளே. முள்ளின் மேல் சேலை விழுந்து விட்டது. அதை சேதப்படாமல் எடுக்கவே முயற்சிக்கிறான். ஆனால் அவளோ, அந்த சேலை விழுந்து விட்டது. இனி அது அவனுக்கு வேண்டவே வேண்டாம் என்று பிடிவாதம் பிடிக்கிறாள்.
“தேனு” என்றவன் அவள் கன்னத்தை தொடப் போக, “என்னைத் தொடாத. நான் வேணாம்” என்று அவன் கையைத் தட்டி விட்டாள்.
அதில் சுள்ளென்று கோவம் வந்தாலும், இப்போது அவள் அவளுடைய நிலையில் இல்லை என்பது புரிந்து, “தொடுவேன். எனக்கு நீத்தான் வேணும்” என்று அவளை தன்னோடு இழுத்தணைத்துக் கொண்டான். ஆனால் அவன் அந்த வார்த்தையை அவளிடம் சொல்லவில்லை. சொன்னால் அதற்கும் சேர்த்து பலவீனப்படுவாள். அவளும் அவனின் கைக்குள் அடங்கித்தான் போனாள்.
இதை எல்லாம் சற்று தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த விழியுடைய கண்களில் கண்ணீர் நிறைந்தது. தன்னால் தான், கவியின் வாழ்க்கை பாழானதோ? என்று தன் மீதே அவளுக்கு அத்தனைக் கோவம்.
இதை எல்லாம் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தவனுக்கோ, வேந்தனுடைய முகத்தில் மட்டுமே அந்த வலி இருக்க வேண்டும். அந்த இரு பெண்களும் சேர்ந்து கலங்குவதைத்தான் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த கோவம் மொத்தமும் வேந்தனின் மீது தான் திரும்பியது.
“உன் கூட இருக்கிறதாலத்தான். அவங்களுக்கு இவ்வளவு கஷ்டம்” என்றவனுக்கும் கூட கவி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும், அவள் பட்ட அத்தனை கஷ்டத்துக்கும், வேந்தன் ஒருவனே பொறுப்பு என்றுத்தான் தோன்றியது.
அதில் கையில் இருந்த தேங்காயை தரையில் அடித்து சுக்கு நூறாய் உடைத்தான். அந்த சத்தத்தில் விழி திரும்ப, அதற்குள், அந்த ஒருவன் அங்கிருந்து சென்றிருந்தான். ஏனெனில் இதற்கு மேல் அவன் அங்கு நின்றிருந்தால், இந்த தேங்காயை நிச்சயம் வேந்தனின் தலையில் தான் உடைத்திருப்பான். அப்படி ஒரு ஆத்திரம்.
பதிவீசாய் பார்த்துக் கொள்ள வேண்டிய கண்ணாடி பாத்திரத்தை கை நழுவி உடைத்து விட்டானே என்ற கோவம், இப்போது வன்மமாய் மாறி அவனை பழிவாங்க காத்துக் கொண்டிருந்தது.
இங்கே அவன் கைக்குள்ளேயே சில நிமிடம் நின்றவள், அங்கு அடித்த கோவில் மணி ஓசையில்த்தான் வேந்தனை விட்டு விலகினாள். அதன் பின்னே தன் தோழியைத் தேட, “குட்டிமா இன்னேரம் காருக்கு போயிருப்பா” என்றான் வேந்தன்.
இப்போது அவனை முறைத்தவளோ, அவனை முந்திக் கொண்டு முன்னே நடக்க, அவனோ மீண்டும் ஒரு முறை அந்த சாமி சன்னதியைப் பார்த்தான்.
“கடவுளே. எனக்கு தெரியல. உன்னால எல்லாமே முடியும் அப்படின்னு எல்லாரும் நம்புறது உண்மை அப்படின்னா, தயவு செஞ்சு என் தேனு மனசுல இருக்கிற அந்த அழுக்கான நினைவுகள எல்லாம் அழிச்சிடு. அவ அத மறந்து நிம்மதியா இருந்தாலே போதும்” என்று மனம் நிறைய வேண்டிக் கொண்டு அவளுடன் வந்தான்.
இப்போது இவர்களைப் பார்த்த அந்த பூக்கடைக்காரக்காவோ, “தம்பி தம்பி” என்றழைக்க, அதில் கவி வேந்தன் இருவருமே நின்றனர்.
அவரோ, “பூ மிச்சமாச்சின்னா, அந்த சாமிக்கு போடுவோம் தம்பி. இன்னிக்கு என்னவோ உங்களுக்கு கொடுக்கனும்னு தோணுச்சு. உங்க பொண்டாட்டிக்கு கொடுங்க தம்பி” என்றவர் அவனின் கையில் பூவை வைத்தார். அதில் அவனோ கவியைப் பார்க்க, அவளோ எதுவும் சொல்லாது நடக்கப் போக, “வேண்டாம்க்கா. என் பொண்டாட்டிக்கு” என்றவன் அடுத்து என்ன சொல்லியிருப்பானோ, வேகமாய் அவனின் அருகில் வந்து அவன் கையில் இருந்த பூவை வாங்கிக் கொண்டு அவனை முறைத்தாள்.
அதில் உள்ளுக்குள் சிரித்தவன், தன் சட்டைப் பையில் இருந்து மேலும் பணத்தை எடுக்கப் போக. “அச்சோ தம்பி இருக்கட்டும். அதான் ஏற்கனவே கொடுத்துட்டீங்களே” என்றவர் மறுத்தார். ஆனாலும் அவனோ அதை பொருட்படுத்தாது மீண்டும் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை அவர் கையில் திணித்து விட்டுத்தான் வந்தான். அவளோ, கையில் இருந்த பூவையும், அவனையும் பார்த்தாள். இன்னும் கூட அவனின் மனைவியாக வாழ அவள் மனசாட்சி சம்மதிக்கவில்லை.
(இவர்கள் இருவரையும் இணைக்கத்தான், அந்த ஒருவனை, அந்த கடவுள் அனுப்பி வைத்துள்ளானா? அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்பதை அடுத்தடுத்த அத்தியாயத்தில் காண்போம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தித்திக்குமா?..
0 Comments
No comments yet.