தேன் – 16

கோவமாய் கிளம்பி சென்ற வேந்தனோ அடுத்த ஒரு வாரம் வீட்டுக்கே வரவில்லை. சென்னை சென்றுள்ளான் என்பது செல்லம்மாவிடம், அருள் கால் செய்து சொல்லும் போது தெரிந்துக் கொண்டாள் கவி. அவ்வளவுத்தான். அன்றைய நாளுக்குப் பின் கவியின் முடிவில் பெரிதாய் எந்த மாற்றமும் வரவில்லை.

கிட்ட தட்ட ஒன்றரை வாரம் கழித்து அன்று வேந்தன் வந்திருந்தான் வரும் போதே அவன் முகத்தில் அத்தனை சந்தோஷம். பால்கனியில் நின்றிருந்தவளுக்கு, அவனின் இந்த எதிர்பாராத வரவு மனதிற்குள் சிறு நிம்மதியைக் கொடுத்தது.

அவள் அவனையேத்தான் பார்த்திருந்தாள். அவனோ அவள் பக்கம் கூட திரும்பவில்லை. அவளுமே அங்கு நிற்காது அறைக்குள் சென்று விட்டாள்.

வேந்தனோ, அருளிடம், “நான் சொன்ன மாதிரி எல்லாம் பண்ணிடு” என்று சொல்லியவன் செல்லம்மாவிடமுமே சில வேலைகளை பார்க்க சொல்லியிருந்தான்.

வீடே சற்று பரபரப்பாக இருப்பது போல் தோன்றியது. அவள் அந்த யோசனையிலேயே வர எதிரில் வந்த வேந்தனின் மீதே மோத சென்றாள். ஆனால் அவனோ, சட்டென்று விலகி அவள் மீது தன் விரல் கூட படாது ஒதுங்கிக் கொள்ள, அவளோ கீழே விழுந்திருந்தாள்.

அதில் அவள் அவனைப் பார்க்க, அவனோ கீழே விழுந்தவளை பொருட்படுத்தாது, அருகில் நின்றிருந்த அருளிடம், “அப்புறம் அருள். நான் சொன்னேன்தான. அதே மாதிரி இது எல்லாத்தையும் மாத்திட்டு புதுசா நான் சொன்ன மாதிரி பண்ணிடு. ஒரு நாள் தான் டைம். அதுக்குள்ள எல்லாத்தையும் மாத்திடனும்” என்றப்படி அங்கிருந்து சென்றிருந்தான்.

ஏனோ இவளுக்குத்தான் ஒரு மாதிரி இருந்தது. அவளே எழுந்து கையைப் பார்த்தாள். முழங்கையில் சிராய்த்திருந்தது. அதை தடவிக் கொடுத்தப்படி அவள் இருந்த அறைக்குள் நுழையப் போக, “மேடம்” என்று அவளைத் தடுத்தான் அருள்.

அருளை அவளுக்கு நன்றாகவே தெரியும். “அண்” என்று அவள் ஆரம்பிக்கும் முன்னே, “மேடம், இனிமே உங்கள சார் அங்க இருக்கிற ரூம்ல தங்கிக்க சொன்னாரு. உங்க திங்க்ஸ் எல்லாம் அங்க ஏற்கனவே வச்சிட்டோம். இந்த ரூமுக்குள்ள சார் பர்மிஷன் இல்லாம யாரும் வரக் கூடாதுன்னு சொல்லியிருக்காரு” என்றான்.

ஏனோ அதை வேந்தன் சொல்லியிருந்தால், அவளுக்கு பெரிதாய் எதுவும் தோன்றியிருக்காதோ என்னவோ? வேறு ஒரு ஆள் மூலம் சொல்ல வைத்ததுத்தான் அவளுக்கு கஷ்டமாக இருந்தது.

“சரி” என்றவள் முகத்தில் எதையும் காட்டாது, அந்த அறைக்குச் சென்று விட்டாள். அருளோ, வெறும் ஒரு நொடித்தான் அவளை பரிதாபமாய் பார்த்திருப்பான். ஆனால் அடுத்த நொடியே அவன் பார்க்க வேண்டிய வேலைகள் நினைவுக்கு வர அவன் வேலையைப் பார்க்க சென்றான்.

இங்கே இன்னொரு அறைக்கு வந்தவளுக்கோ இப்போது வேந்தனின் மீது கோவம் எட்டிப் பார்த்தது. “என்னவோ நான் இந்த வீட்டுலையே இருக்கனும்னு சொன்ன மாதிரி. நானா அவர் ரூம்ல போயி இருக்கனும்னு அடம்பிடிச்சேன். அவர் தான அங்க இருக்க சொன்னாரு. இங்கையும் என்ன எதுக்கு இருக்க சொல்லனும்? பேசாம வீட்ட விட்டே அனுப்பிடலாமே. நிம்மதியாவாச்சும் இருப்பேன்” என்று புலம்பியவளை சட்டென்று யாரோ பின்னிருந்து இறுக்கமாய் அணைத்துக் கொள்ள, அவளோ பதறி “ஆ” என்று கத்தியே விட்டாள்.

அவளின் கத்தலில், அருளில் ஆரம்பித்து செல்லம்மா ஏன் வேந்தன் வரை அவள் அறைக்கு வந்திருந்தனர்.

“ஹேய், எதுக்குடி இப்போ ரேப் பண்ண வந்த மாதிரி கத்துற” என்ற விழியின் குரலில், பட்டென்று திரும்பி அவளைப் பார்த்தாள். ஒரு நொடி அவளுக்கு தன் முன்னே நிற்பவளை பார்க்க, அவள் கண்ணையே நம்ப முடியவில்லை.

“விழி” என்றவளின் பெயர் கூட அவள் வாயில் இருந்து வர வில்லை. அதைப் பார்த்தவளோ, “என்ன அண்ணியாரே, நாத்தி வந்திருக்கேன். அதுவும் உங்களோட ஒரே ஒரு நாத்தனார். பார்த்த உடனே பாய்ஞ்சி கட்டிப்பீங்கன்னுப் பார்த்தா, இப்படி பேயைப் பார்த்த மாதிரி நிக்குறீங்க? ஏன்? எங்க அண்ணன்ன மட்டும் தான் கட்டிப்பீங்களா? இல்ல எங்க அண்ணன் மட்டும் தான் கட்டிக்கனுமா? நாங்களாம் கட்டிக்க கூடாதா?” என்று சொல்லியப்படி அவளே வந்து மீண்டும் அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

அதில் வேந்தனோ மற்றவர்களைப் பார்க்க, அவர்களும் சிரித்தப்படி அங்கிருந்து சென்று விட்டனர். கவிக்கோ கண்ணெல்லாம் கலங்கியது. அவளை திரும்பி பார்க்கவே முடியாதோ? என்று நினைத்து கலங்கிய நாட்கள் எல்லாம் உண்டு.

“விழி எப்படி இருக்க?” என்று அவள் கண் கலங்கியப்படி கேட்க, வேந்தனின் முகமோ அப்போதுத்தான் சாதாரணமாகியிருந்தது. ஏனெனில் எங்கே அவள் தன்னிடம் நடந்துக் கொண்டது போலவே, தன் தங்கையிடமும் நடந்துக் கொள்வாளோ? என்று நினைத்துத்தான் இரும்பென இறுகியிருந்தான். ஆனால் தங்கையை அவளும் அணைத்துக் கொண்டிருக்க, வேந்தனோ அவன் வேலையைப் பார்க்க சென்றான்.

“எப்படி இருப்பேன்? எப்பவும் போலத்தான்” என்று அவள் சிரித்தப்படி சொல்ல, அவள் சிரிப்பதையே பார்த்த கவிக்கும் கூட முகத்தில் மெல்லிய மகிழ்ச்சி பரவியது.

அதைப் பார்த்த விழியோ, “ஸ்ப்பா. உன் பேஸுக்கு இந்த சோகம் எல்லாம் கொஞ்சமும் செட்டே ஆகல தெரியுமா? என் கவி எப்பவுமே சிரிச்சிட்டே இருக்கனும்” என்று சொல்லி அவள் கன்னம் கிள்ளி முத்தமிட்டாள்.

அதில் கவியோ, “உனக்கு என் மேல கோவம் இல்லையா?” என்று கேட்க, “உன் மேலையா? எனக்கா? ஹா. ஹா. குட் ஜோக். நான் ஏன் உன் மேல கோவப்படப் போறேன். அதான் நான் ஆசைப்பட்ட மாதிரியே நீ என் அண்ணியா வந்துட்டீயே. ஈவன் என் அண்ணா மேலத்தான் செம்ம காண்டுல இருக்கேன். கல்யாணத்துக்கு என்னை அவன் கூப்பிடவே இல்ல” என்று கோவமாய் கூறினாள்.

அதைக் கேட்ட கவியோ, “ஹேய் இது” என்று ஏதோ பேசப் போக, “ம்ஹூம். எனக்கு உன்கிட்ட பேச வேண்டியது நிறையா இருக்கு. பட் இப்போ நான் குளிக்கனும். சோ நீ எனக்கு போட்டுக்கிடுறதுக்கு ஒரு ட்ரஸ் எடுத்து வை. என் பேக் அங்க இருக்கு” என்றவள் துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்றாள்.

அவள் சொல்லியதைக் கேட்டவளுக்கு ஏனோ நீண்ட நாட்களுக்கு பின் சிரிப்பு எட்டிப் பார்த்தது. அதென்னவோ விழி யார் பேச்சையும் கேட்க மாட்டாள். அதிலும் அவளின் விருப்பத்தில் எல்லாம் ஒருவரும் தலையிட முடியாது. அவளுக்கு பிடித்ததை மட்டுமே செய்யும் ரகம். அதிலும் அவள் விருப்பத்தை எல்லாம் அச்சு பிசுங்காமல், அவன் அண்னன் சுடர் நடத்திக் கொடுத்து விடுவான். ஆனால் கவியிடம் மட்டும் விழியின் குணம் முற்றிலும் வேறு. அவள் சொன்னால் கேட்டுக் கொள்வாள். அவள் வாழ்க்கையில் முக்கியமான முடிவுகளைக் கூட கவியைக் கேட்டுத்தான் செய்வாள். ஏன் அவள் அணியும் உடையைக் கூட கவியைத் தான் தேர்ந்தெடுக்க சொல்வாள். கல்லூரியில் மற்ற தோழிகள் கூட, “ஹேய் கொஞ்சம் விட்டா, உனக்கு மாப்பிள்ளைய கூட, கவியத்தான் பாக்க சொல்லுவ போல” என்று கிண்டல் செய்வார்கள்.

“ஆமா. கவி பார்த்து யாரை கட்டிக்க சொன்னாலும், நான் கட்டிப்பேன்னே. அதே மாதிரி கவியும் நான் சொல்ற பையனத்தான் கல்யாணம் பண்ணிப்பா” என்று விழி அசராது கூறுவாள்.

“க்கும் பார்த்தும்மா. ரெண்டு பேரும் ஒரே பையன்ன கல்யாணம் பண்னிக்கிடாதீங்க” என்று தோழிகள் சீண்ட, “ச்சீ ச்சீ. அசிங்கமா பேசாதீங்க. கவிக்கு மாப்பிள்ளைன்னா, அது எனக்கு அண்ணன். எனக்கு மாப்பிள்ளைன்னா, அது கவிக்கு அண்ணன்” என்று அவர்களின் தலையில் கொட்டி சொல்லிவிட்டு செல்வாள்.

அதனாலையே கவி அருளை அண்ணா என்று அழைக்கும் போதெல்லாம் விழி, “ஹேய் அவருக்கு கல்யாணம் ஆகி, ஐஞ்சு வயசுல ஒரு பொண்னு இருக்கு. அதனால நீ அவங்க ஒயிப் கிட்ட எனக்கு அடி வாங்கி கொடுத்துடாத. நீ நல்ல அண்ணாவா செலக்ட் பண்னாத்தான் என்னால அந்த அண்ணாவ கல்யாணம் பண்ணிக்க முடியும்” என்று சீண்டலாய் கூறுவாள்.

இப்போது அதை எல்லாம் யோசித்தப்படி நின்றிருந்த கவியின் முன்னே வந்து நின்ற வேந்தனோ, “நமக்குள்ள நடந்த விஷயம் எதுவும் குட்டிமாக்கு தெரியாது. ஈவன் அது தெரியவும் வேண்டாம்னு நினைக்கிறேன். சோ அவ இங்க இருக்கிற வரைக்கும் சந்தோஷமா இருக்கனும். அவ சந்தோஷம் தான் எனக்கு எல்லாத்தையும் விட முக்கியம்” என்று அவளைப் பார்க்காது கண்ணாடியில் தெரிந்த அவள் பிம்பத்தைப் பார்த்து அழுத்தி சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றிருந்தான்.

அவனின் மூச்சுக்காற்று கூட அவள் மீது பட்டு விடக் கூடாது என்று அவள் பக்கம் கூட அவன் திரும்பவில்லை. அத்தனை உறுதி அவனிடம். அதில் கவியின் மனம் அவனிடம் சற்று தடுமாறித்தான் போனது.

ஆனால் அதற்குள், “டரஸ் எடுத்து வச்சிட்டீயா கவி?” என்று கேட்டப்படி அவள் வந்திருக்க, “ம் இந்தா எடுக்கிறேன்” என்றவள், அவள் ட்ராலியை ஓபன் செய்தாள். எடுத்த உடனே அதில் கவியும், விழியும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத்தான் பெரிதாய் அதில் ஒட்டி வைத்திருந்தாள்.

அதற்குள்ளாக விழியோ, வேகமாய் அந்த பேக்கில் இருந்த ஒரு கவரை எடுத்து, “இது என் ஸ்பெஷல் அன்ணிக்காக, நான் யு கே ல இருந்து வாங்கிட்டு வந்தேன். ஈவன் என் அண்ணாக்கு கூட நான் எதுவும் வாங்கிட்டு வரல” என்றாள்.

அவளின் அன்பில், கவிக்கு கண்கள் கரிக்க, இருந்தும் அதை உள்ளிழுத்து அவளுக்கு ஒரு உடையை தேர்வு செய்துக் கொடுத்தாள்.

“சரி நான் போய் இத மாத்திட்டு வரேன்” என்றவள் அங்கிருந்த உடை மாற்றும் அறைக்குச் செல்ல, இப்போது கவியோ அந்தப் புகைப்படத்தைத்தான் மெதுவாய் வருடினாள்.

அந்தப் புகைப்படத்தை, வேந்தன் தான் எடுத்தான். எடுக்கும் போது கவியோ அவன் ஒருவனைத்தான் பார்த்திருந்தாள்.

அதில் விழியோ, “ஹேய் என் அண்ணாவ கட்டிக்க மாட்ட. ஆனா சைட் மட்டும் அடிப்ப. அப்படித்தான?” என்று கிண்டலாய் கேட்க, “ஹேய் அடி வாஙகப் போற நீ? அவரு கையிலத்தான் கேமரா இருக்கு. அப்போ அங்கத்தான பார்க்கனும்” என்றாள் கவி.

“அப்போ கேமராவ பார்த்தா போதுமே, எதுக்கு கேமரா வச்சிருக்கிறவர பாக்குற” என்று அப்போதும் விழி விடாது சீண்ட, “ச் நான் போட்டோவே எடுக்கல. போ” என்று நகர சென்றவளின் தோள் மீது கைப் போட்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டாள் விழி.

சரியாக அதை வேந்தன் புகைப்படம் எடுத்திருந்தான். எடுத்தவன் முகத்திலும் மெல்லிய புன்னகை தவழ்ந்தது. அதில், “தங்கைக்கு இவள் மீது அப்படி என்னத்தான் பைத்தியமோ?” என்றுத்தான் அவனுக்கு தோன்றியது. ஆனால் அவனே அவளின் மீது பித்தாகி திரியும் நாள் தொலைவில் இல்லை என்று அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

“அண்ணா. இந்த போட்டோவ என் ரூம்ல பெருசா மாட்டனும்” என்று விழி சொல்ல, அவனோ, “சரிடா குட்டிமா மாட்டிடலாம்” என்றான்.

அதைப் பார்க்கும் போதெல்லாம் கவிக்கு தோன்றுவது ஒன்றே ஒன்றுத்தான். இவன் என்ன மாதிரியான அண்ணன்? தங்கை என்ன சொன்னாலும் தலையாட்டுகிறானே? இப்படியுமா ஒருவன் இருப்பான்?

பின்னே அவள் யார் என்றே தெரியாது அவனுக்கு. ஆனால் அவர்கள் வீட்டில் பெரிதாய் தன் புகைப்படத்தை மாட்ட அவள் சொல்கிறாள், இவனும் உடனே தலையாட்டுகிறான். அதைத்தான் அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவள் யோசிப்பாள். அப்படி அவள் யோசிப்பதைப் பார்க்கும் விழியோ, அவள் என்னவோ வேந்தனை காதலாய் சைட்டடிப்பது போல் கிண்டல் செய்வாள்.

இப்போதும் அதையெல்லாம் யோசித்த கவிக்கு, சட்டென்று தோன்றியது ஒன்றுத்தான்.

“அப்போ விழி என்ன வேண்டாம்னு சொல்லிட்டா, அவனும் என்ன வேண்டாம்னு அனுப்பிடுவான் தான” என்று மூளை விபரீதமாய் யோசித்தது.

ஆனால் அடுத்த நொடியே, “விழி உன்னை வேண்டாம்னு சொன்னா, இந்த உலகம் அழிஞ்சிடும். வேந்தன் கூட கோவத்துல உன்னை விட்டுப் போக வாய்ப்பு இருக்க. ஆனா விழி வாய்ப்பே இல்ல” என்று அவளின் மனம் சொல்ல அதில் இருக்கும் உண்மை புரிந்து அதற்கு மேல் அதைப் பற்றி யோசிக்கவில்லை.

(ரொம்ப அழுத்தம் சரி அடுத்து என்னாகப் போது. இந்த விழியோட வருகையால வேந்தன் கவி சேருவாங்களா? அது என்னென்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)

தித்திக்குமா?..

Comments   1

*** தேன் – 16 - படைப்பை ரேட் செய்யுங்கள் ***