வேந்தன் சென்றப் பின் தான் கிச்சனில் இருந்து வெளியில் வந்தாள் தேன் கவி. வீட்டில் வேலைப் பார்ப்பவர்கள் அத்தனைப் பேரும், அவன் வாங்கிக் கொடுத்த உடையையும், ஸ்வீட் பாக்ஸையும் தான் கையில் வைத்திருந்தனர். அவளோ அதை எல்லாம் கண்டுக் கொள்ளாது மேலே அறைக்கு சென்றாள்.
அங்கே கட்டிலில் ஒரு கவர் இருந்தது. அது என்னவென்று கண்டுப்பிடிக்க அவளுக்கு ஆறாம் அறிவெல்லாம் தேவையில்லை. அதில் இவளுக்கு அவன் புடவை வாங்கி வைத்திருப்பான். தெரிந்தும் அதை எடுக்காது, ஒரு சாதாரண புடவை ஒன்றை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்றிருந்தாள்.
இங்கே வேந்தனோ இடையில் இரு முறை கால் செய்து அவளைப் பற்றி செல்லம்மாவிடம் விசாரித்துக் கொண்டான். கவியோ அமைதியாய் நூலக அறையில் அமர்ந்து எதையோ எழுத துவங்கிவிட்டாள்.
அவ்வப்போது ஏதாவது எழுதுவாள் தான். இன்றும் அப்படி எழுத தோன்ற அதில் மூழ்கிவிட்டாள். மாலை முடிந்து இரவு நெருங்கியும் வேந்தன் வந்திருக்கவில்லை. ஒரு நொடி நேற்று போல் இன்றும் குடித்து விட்டு வருவானோ? என்று நினைத்து பயந்தது.
“ஆ..ங் இல்ல இல்ல. வேந்தன் சார் அப்படி எல்லாம் பண்ண மாட்டாரு” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். அங்கே வேந்தனுக்கோ அடுத்தடுத்த வேலைகள். அரசியலுக்கு என்று வந்து விட்டாலே, சில விஷயங்களை எல்லாம் செய்தே ஆக வேண்டும். அதனால், கோவில், பள்ளிக்கூடம், மற்றும் மருத்துவமனை என்று ஒவ்வொரு இடமாய் முடித்து வீட்டுக்கு வர பதினொன்றை தாண்டியிருந்தது.
உண்மையில் மற்ற நேரமாக இருந்திருந்தால், அங்கு வந்திருக்கவே மாட்டான். ஏனோ பிறந்த நாள் முடியும் முன்பு அவளை பார்க்க ஆசைப்பட்டது. ஒரு வேளை அவள் வாழ்த்துவாளோ? என்ற சிறு நற்பாசையும் அவனுக்கு இருக்கத்தான் செய்தது.
அதனால் தான் மீதி வேலையை அருளிடம் ஒப்படைத்து விட்டு, அங்கு வந்து சேர்ந்தான். நேற்று போல் இன்றும் அவளின் தரிசனம் வாசலிலேயே கிடைக்காதா? என்று கூட ஏங்கியது.
“டேய் என்னாச்சுடா உனக்கு?” என்று அவனின் மனமே அவனை கேலி செய்தது.
“ம் என்னப் பண்ணித் தொலைக்கட்டும். ஒரு ராங்கிய கட்டிட்டு நான் படுற பாடு இருக்கே. ஐயோ” என்று சொல்லியப்படி வீட்டுக்குள் நுழைந்தான்.
செல்லம்மாத்தான் ஹாலில் அமர்ந்திருந்தார். இவனைப் பார்த்ததும், “வாங்க தம்பி. சாப்பாடு எடுத்து வைக்கவா?” என்றார்.
“ஆ..ங் இல்ல. நீங்க சாப்டீங்கன்னா போய் படுங்க” என்று அவன் நகரும் முன் ஒரு நொடி நின்றான். அவன் மனம் புரிந்தது போல் செல்லம்மாவோ, “அவங்க சாப்டுத்தான் தம்பி மேல போனாங்க” என்றார்.
அதில் சிறு புன்னகையுடன் அவனும் மேலே அவனின் அறைக்கு வந்தான். ஆனால் அவள் அங்கும் இருக்கவில்லை. “என்ன இவ? இன்னிக்கு என் கண்ணுலையே படக் கூடாதுன்னு முடிவோட இருக்கா போலையே” என்று நினைத்தாலும் தானே சென்று பார்க்க மனம் வரவில்லை. ஏனோ அவளாக தன் முன்னே வர வேண்டும் என்று மனம் அலைப் பாய்ந்தது.
அதுவும் போக நிறைய இடத்துக்கு சென்று வந்திருக்க, இலகுவான உடை ஒன்றை எடுத்துக் கொண்டு குளித்து முடித்து வெளியில் வந்தான்.
அப்போதும் அவள் வந்திருக்கவில்லை. மணியைப் பார்த்தான். கிட்ட தட்ட பதினொன்று ஐம்பதாகியிருந்தது. இன்னும் பத்து நிமிடம் தான் இருந்தது. எப்படியும் அந்த நாள் முடியும் வரை அவள் வர மாட்டாள் என்பது அவனுக்கே புரிந்தது. அப்போதுத்தான் காலையில் வைத்திருந்த அந்த புடவை கவர் இன்னும் கூட பிரிக்கப்படாமல் இருப்பது தெரிந்தது. அது அவனுக்கு ஒரு வித கோவத்தைக் கொடுத்தது.
“அவ்வளவு திமிரு. அப்படி ஒன்னும் அவ வாழ்த்து எனக்கு தேவை கிடையாது. இப்போ அவ விஷ் பண்ணலன்னா என்ன இப்போ?” என்று சொன்னாலும் கூட அடுத்த ஐந்து நிமிடம் கூட அவனால் முடியவில்லை.
“அப்படி என்ன அவ திமிரு? அவ நினச்சா, அத நான் நடக்க விடனுமா? இது என் வீடு. அவ என் பொண்டாட்டி. நான் போய் பார்ப்பேன்” என்று தனக்குத் தானே ஏதோ சமாதானம் சொல்லி அவளைத் தேடி வெளியில் வந்தான். நேரே அவன் நூலக அறைக்குச் செல்ல, அங்கே அவள் இல்லை.
“இங்கத்தான இருப்பா? இங்க இல்லன்னா எங்க போயிருப்பா?” என்றவனும் அங்கே ஒரு அறை விடாது அத்தனை அறையையும் தேடினான். சட்டென்று ஏதோ தோன்ற, அவன் மாடியேறும் போதே பன்னிரெண்டு மணி ஆகியிருந்தது.
“நினைச்சத சாதிச்சிட்டா” என்று தனக்குத் தானே சொல்லியவனுக்கு இப்போது அத்தனைக் கோவம். ஒரு வித கடுப்பில் தான் மொட்டை மாடிக்கு வந்தான். அவளோ அமைதியாய் அங்கிருந்த திண்டில் சாய்ந்து நின்று அந்த நிலாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உனக்கென்ன அவ்ளோ பிடிவாதம். ரோட்டுல போறவன் சாக்லெட் கொடுத்தாக் கூட, ஒரு வாழ்த்து சொல்லுவோம். ஆனா உனக்கு அப்படிக் கூட சொல்லத் தோணலல்ல” என்றப்படி அவளின் முன்னே வந்து நின்றான்.
அவளோ, வெகு சாதாரணமாய், “நான் ஏன் சொல்லனும்?” என்றாள். “அதான நீ ஏன் சொல்லப் போற?” என்றவனுக்கு அத்தனை எரிச்சல். அத்தனைக் கோவம். உண்மையில், இப்படி எல்லாம் அவளிடம் கோவத்தைக் காட்ட அவன் நினைக்கவே இல்லை. ஆனாலும் ஏனோ, ஒரு வாழ்த்து கூட அவள் சொல்லவில்லை என்ற ஆதங்கம்.
சில நொடிகள் கழித்து அவளோ, “இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. என்னை விட்டுட்டு நீங்க வேற ஒரு நல்லப் பொண்ணா, கல்யாணம் பண்ணிக்கோங்க. அந்தப் பொண்னு உங்க விருப்பத்த நிறைவேத்துவா” என்றாள்.
அவளின் பேச்சில் இன்னும் எரிச்சலானவனோ, “போதும் நிறுத்து. நான் என்னப் பண்ணனும்னு எனக்குத் தெரியும். நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். ஏன் ஒரு விஷ் பண்ணலன்னு கேட்க வந்தா, உடனே, இதுக்காக நான் என் பொண்டாட்டிய விட்டுட்டு போவனுமாம். போ போ. இத எல்லாம் வேற ஏதாச்சும் ஒரு பைத்தியக்காரன்கிட்ட சொல்லு. அவன் வேணும்னா, நீ சொன்ன உடனே அத செய்வான். இந்த வேந்தன் ஒரு முடிவு எடுத்தா எடுத்தது தான். அத நீ இல்ல. அந்த கடவுளே நினைச்சாலும் மாத்த முடியாது” என்று கோவமாய் கூறினான்.
அதில் அவளோ எதுவும் சொல்லாது மீண்டும் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். அவனோ அங்கிருந்த பால்கனி ஊஞ்சலில் சென்றமர்ந்தான்.
“டேய் வேந்தா. இவ பேசுறதெல்லாம் கேட்டா, நம்மையே டென்சன் பண்ணி ஏதாச்சும் சொல்ல வச்சிடுவா. அவளுக்கென்ன உன்னை விட்டுட்டு போகனும். அதுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவா. சோ நீ உன் நிதானத்த விட்டுடாத” என்று தனக்குத் தானே அழுத்தமாய் சொல்லிக் கொண்டான்.
அவன் புலம்புவது காதில் கேட்டாலும் அவன் பக்கம் அவள் திரும்பவே இல்லை.
சில நொடிகள் கழித்து அவனேத்தான், “அதான் என் பிறந்த நாளே முடிஞ்சிருச்சே. இன்னும் எதுக்கு இங்க நின்னுட்டு இருக்க. ரூமுக்கு போய் தூங்க வேண்டியதுத்தான. என் முன்னாடி வரக் கூடாது. ஒரு விஷ் பண்ணக் கூடாதுன்னுத்தான இவ்வளவும் பண்ண” என்றான்.
“எப்பவுமே உங்க முன்னாடி நான் வரக் கூடாதுன்னுத்தான் நான் நினைக்கிறேன். எனக்கு உங்கள பாக்க பிடிக்கவே இல்ல. அநாதையா இருந்த எனக்கு உதவி பண்றீங்கன்னு நினைச்சித்தான் உங்க மேல மரியாதை வச்சிருந்தேன். ஆனா, நீங்களும் மத்த ஆம்பளைங்க மாதிரித்தான்னு நேத்தே நிரூபிச்சிட்டீங்க. இதுக்கு மேல, உங்க முன்னாடி வர்றதுக்கே எனக்கு அறுவருப்பா இருக்கு” என்றாள்.
அவள் வார்த்தையைக் கேட்ட வேந்தனுக்கு நரம்பு புடைத்து கோவம் எட்டிப் பார்த்தது. அவன் தாடையெல்லாம் இறுகியது. “வேண்டாம் வேந்தா. அவ நீ கோவப்படனும்னுத்தான் இவ்வளவும் பேசுறா. நீ ரியாக்ட் பண்ணாத” என்று தன்னைத் தானே கட்டுப்படுத்த முயற்சித்தான். அது அவன் சிவந்த முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.
அதற்கு மேல் நொடி நேரம் நின்றால் கூட, அவளை ஏதாவது சொல்லிவிடுவோம். இல்லை என்றால் அவளிடம் எக்குத் தப்பாய் ஏதாவது செய்து விடுவோம் என்று தோன்ற, எதுவும் பேசாது, விறுவிறுவென்று நடந்தான்.
“உங்களுக்கும் இந்த உடம்புத்தான வேணும். எத்தன நாள் வேணும்னு சொல்லுங்க. நீங்க இது நாள் வரைக்கும் பண்ண உதவிக்கு, என்னால முடிஞ்சத நான் கொடுத்துடுறேன். அதுக்கப்புறமாச்சும் என்னை விட்டுடுங்க. ஏன்னா, இந்த மாதிரி செய்றது ஒன்னும் எனக்கு புதுசு இல்ல” என்று சொல்லி முடிக்கும் முன்னே அவள் கழுத்தை பிடித்து நெறித்து அப்படியே ஒற்றைக் கையால் அவளை தூக்கியிருந்தான்.
கோவம் கோவம் கோவம். அவன் கண்கள சிவந்து அனலைக் கக்க, அவன் நெற்றி எலும்பெல்லாம் புடைத்துக் கொண்டு நின்றது. அத்தனைக் கோவம். அவளோ அவனுக்கு சற்றும் குறைச்சல் இல்லாமல் அவனைப் பார்த்தாள்.
அவள் விழிகளில் அத்தனைப் பிடிவாதம். அவன் பிடித்த பிடியில் அவள் கழுத்து நரம்புகள் எல்லாம் புடைத்து மூச்சுக்காய் திணறியது. ஆனால் அவளோ, அதை சிறிதாய் கூட காட்டவில்லை. இன்னும் சில நொடிகள் அவன் அழுத்திப் பிடித்தால் மொத்தமாய் அவள் மேலோகமே சென்று விடுவாள். அதில் சட்டென்று அவள் கழுத்தை விடுவித்தவன், “ஆமாடி எனக்கு உன் உடம்புத்தான் வேணும். எத்தன நாள்ன்னு கேட்டத்தான? சரி சொல்றேன்” என்றவன் கீழே கிடந்தவளை மேலே இருந்து கீழே பார்த்தான்.
“இந்த வேந்தன மயக்குற அளவுக்கு உன்கிட்ட, இத்தனூண்டு கூட எதுவும் இல்ல. நீ என்னடி என்ன பிடிக்கலன்னு சொல்றது. நான் சொல்றேன். உன்னை எனக்கு சுத்தமாவே பிடிக்கல. நீயே வந்து என் பக்கத்துல நின்னாக் கூட, உன்னை என் நிழல் கூட தொடாது. நேத்து வரைக்கும் உன்னை என் பொண்டாட்டின்னு நினைச்சதால மட்டும் தான் உன்கிட்ட நெருங்கி வந்தேன்னே தவிர. உன் அழகுல மயங்கி ஒன்னும் கிடையாது. இப்போ இந்த செகண்ட், இந்த வேந்தன் சொல்றத நல்லா கேட்டுக்கோ” என்று சொடக்கிட்டவனின் கோவத்தின் முன் கவியின் கோவம் எல்லாம் சிறு துளியளவுக்கு கூட போதாது.
“இந்த வீட்ட பொறுத்த வரைக்கும் மட்டும் தான் நீ என் பொண்டாட்டி. என்னிக்குமே நீ என் மனசுல பொண்டாட்டியாக மாட்ட. அதுக்காக, உன் கழுத்துல இருக்கிறத கழட்டி அனுப்பிடுவேன்னு நினைச்சிடாத. நான் சாகுற வரைக்கும், உன் கழுத்துல அது இருக்கும். இந்த ஜென்மத்துல எனக்கு ஒரு கல்யாணம் தான். அது முடிஞ்சுப் போச்சு. இதுக்கப்புறம் இந்த வேந்தனுக்கு கல்யாணம்ன்ற ஒன்னும் கிடையாது. பொண்டாட்டின்னும் எவளும் கிடையாது. குறிப்பா. உன்னை ச்சீ..” என்று வெறுப்பாய் சொல்லியவன் திரும்பியும் பாராது கீழிறங்கி சென்றிருந்தான்.
அவளைத் தொட்டது கூட அவனுக்கு அத்தனை அறுவறுப்பாய் இருந்தது. அவனின் கோவம் தீரவே இல்லை. தன் அறைக்குள் சென்று குளியலறைக்குள் புகுந்தவன் சவரின் அடியில் வெகு நேரமாய் நின்றான். அவனின் ஆத்திரம் சற்றும் தீரவே இல்லை. அதற்கு மேல் அந்த வீட்டில் இருக்க அவனுக்கு பிடிக்கவே இல்லை. அப்படியே அங்கிருந்து காரை எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.
இங்கே மாடியில் கவியோ அப்படியேத்தான் இருந்தாள். அவனைப் பற்றி தெரியும். முடிவு எடுத்தால் மாற்றிக் கொள்ள மாட்டான் என்று. ஆனால், அவன் இப்படி சொல்லி செல்வான் என்று அவள் நினைக்கவே இல்லை. அவளுடன் அவன் வாழமாட்டேன் என்பதெல்லாம் அவளுக்கு பிரச்சனையே இல்லை. ஏனெனில் அவளுமே அவனுடன் வாழப் போவதில்லை. ஆனால் அவனோ எவளுடனும் வாழ மாட்டேன் என்று சொல்லியிருக்க, அதுத்தான் அவளை மொத்தமாய் வாட்டியது.
அவனின் வாழ்க்கையே தெரிந்த இன்னொரு முறை கெடுத்து விட்டோம் என்று புரிய அப்படியே கால்லைக் கட்டிக் கொண்டு அமர்ந்து விட்டாள். கண்ணீர் வரவில்லை. கண்ணீர் எல்லாம் உணர்விருந்தால்த்தானே வரும். அவளுக்குத்தான் எப்போதோ அந்த உணர்வெல்லாம் செத்து போயிருக்க, இப்போது அத்தனை திடமாய் தான் இருந்தாள்.
(கடைசியில எங்கே வேந்தனையே கடுப்பேத்திட்டீயேம்மா. சரி அடுத்து என்னத்தான் ஆகப் போது, இவங்க பஞ்சாயத்த யார் தான் வந்து தீர்த்து வைக்கப் போறாங்க? விழி வருவாளா? இல்லையா? இப்படி எல்லாத்தையும் அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தித்திக்குமா?..
Shree Ram
enna ma ippadi pannara😡😡😡😡