கவியோ விடாது பேச, அதற்கு மேல் பொறுக்க முடியாது, அவள் இதழை அப்படியே சிறைப் பிடித்தது வேந்தனின் இதழ்கள். என்ன என்று யூகிக்கும் முன்னே, அவனின் வன் உதடுகள், இவள் மென் உதட்டில் சலனமில்லாமல் தன் தடத்தைப் பதித்திருக்க, ஏதோ உயர் மின் அழுத்தம் தாக்கிய நிலையில் தான் அவள் இருந்தாள். அவளிடம் சிறு அசைவு கூட இல்லை. அத்தனை அதிர்ச்சி. சத்தியமாய் அவன் இப்படி அத்து மீறி முத்தமிடுவான் என்று அவள் நினைக்கவே இல்லை.
அவன் எச்சில், அவள் தொண்டைக்குள் இறங்கும் நொடித்தான் சுய நினைவு வந்து, வேகமாய் அவனை தன்னில் இருந்து விலக்கித் தள்ள முயன்றாள். ஆனால் வெறும் முயற்சி மட்டுமே. அவள் கோவமாய் அவன் நெஞ்சில் அடித்து தள்ள, அப்போதும் அவன் இரும்பென்று நின்றிருந்தான். சிறிதாய் கூட அவனை இவளால் அசைக்க முடியவில்லை. அந்த ஆதங்கம் கண்ணீராய் உருவாகி, அவன் உதட்டை நனைக்க, அதில் பட்டென்று அவளை விட்டு விலகினான் வேந்தன்.
அவனுமே இப்படி முன்னேற வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால், அந்த நொடி அவன் சற்று பின் வாங்கினாலும், அவள் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிப்பாள். அதனால் அவள் சுதாரிக்கும் முன்னே இவன் வேகமாய், “உனக்கு யாரும் இல்லன்னு நீ சொல்ல, சொல்ல, உனக்கு நான் யாருன்னு நிரூபிச்சிட்டே இருப்பேன். அது உனக்குத்தான் கஷ்டம்” என்று கூறினான்.
அதில் அவளோ அவனை அதிர்ந்துப் பார்க்க, அவனோ வெகு இயல்பாய் அவளை நெருங்கி “இப்போ நான் உனக்கு கொடுத்த முத்தம் உனக்கு உண்மையாவே வேண்டாம்னா, அத நீ எப்போ வேனும்னாலும் எனக்கு திருப்பிக் கொடுக்கலாம். இல்ல, உனக்குப் பிடிச்சிருக்கு அப்படின்னா, அத நீயே வச்சுக்கோ. எனக்கொன்னும் பிரச்சன இல்ல” என்று சொல்லியப்படி நகர்ந்தான் வேந்தன்.
அவன் சொல்லியதில் ஒரு நொடி புரியாது அடுத்த நொடி புரிந்து, அவளோ பத்திரகாளியாய் மாறும் முன்னே, அவன் அங்கிருந்து, சென்றிருந்தான்.
அவனின் செயலிலும், வார்த்தையிலும் அவளுக்கு கோவமும், அழுகையும் சேர்ந்தே வந்து தொலைக்க, அவன் கொடுத்த முத்தம், இன்னும் கூட அவள் இதழில் அப்படியே இருப்பது போல் ஒரு எண்ணம். அப்படியே அமர்ந்து விட்டாள்.
தன் முன்னே இருந்த நீரால் அவள் முகத்தை அழுத்திக் கழுவி, தன்னை மீட்க முயற்சிக்க, ஏனோ அவனின் மீது கோவம் தான் வந்தது.
“உங்க இஷ்டத்துக்கு என்கிட்ட என்ன வேனும்னாலும் பண்ணலாம்னு நினைச்சிட்டீங்கத்தான. இதுக்கப்புறம் நிங்க என்னை நெருங்கவே முடியாத மாதிரி நான் பண்றேன்” என்று தனக்குள்ளே அழுத்தமாய் சொல்லியப்படி வீட்டுக்குள் சென்றாள் கவி.
அவள் செல்லும் வரையிலுமே, மாடியில் இருந்து அவளைப் பார்த்தவன், அவள் வீட்டுக்குள் சென்றப் பின் தான் இழுத்து வச்ச மூச்சை வெளியிட்டான்.
“உப். என்னடா வேந்தா? என்னப் பண்ணி வச்சிருக்க. இப்படி எல்லாம் நீ பண்ணா, அவ உன்னை விட்டு ஓடாம என்னப் பண்ணுவா?” என்று அவன் மனசாட்சி கேட்க, “அதுக்குன்னு அவ என்ன வேணும்னாலும் பேசுவாளா? அவ என்னைப் பத்தி என்ன வேணும்னாலும் பேசிட்டு போகட்டும். ஆனா அதுக்குன்னு அவ தகுதிய குறைச்சிப்பாளா? இப்படி ஏதாச்சும் பன்ணாத்தான், அவளுக்கு இந்த வேந்தனோட பொண்டாட்டின்றது ஞாபகத்துல இருக்கும். இல்லன்னா, இப்படித்தான் எதையாச்சும் பேசி மனுஷன வெறுப்பேத்துவா” என்று தனக்குள்ளே அழுத்தம் திருத்தமாய் சொல்லிக் கொண்டான் வேந்தன்.
சட்டென்று தங்கையின் நினைவு வர, அவளுக்கு கால் செய்து பேசினான். அவள் என்ன சொன்னாளோ? இல்லை கேட்டாளோ? வேந்தனோ, “இல்லடா குட்டிமா. அவளுக்கு இன்னுமே நம்ம டைம் கொடுக்கனும். அவ பாவம். அவ கஷ்டத்துல இருந்து வெளிய வரனும். சோ இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். உனக்கு அங்க எல்லாம் ஒகேத்தான? கவனமா இரு. எதுன்னாலும் கால் பண்ணு” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அதன் பின் அவன் அறைக்கு வந்துப் பார்க்க, அவளோ அமைதியாய் உடை மாற்றி சோபாவில் படுத்திருந்தாள்.
“என்னடா இது? எப்படியும் அழுதுட்டு இருப்பா. இல்லன்னா பண்ண வேலைக்கு இன்னும் நாலு அடி அடிப்பான்னு நினைச்சேன். இவ என்னென்னா, எதுவுமே நடக்காத மாதிரி தூங்கிட்டு இருக்கா. இல்லையே இவ இப்படி அமைதியா இருந்தா ஆபத்தாச்சே” என்று தனக்குள்ளே சொல்லியப்படி அவளைப் பார்த்தான்.
“இல்லடா வேந்தா, இந்த தடவ இவ நினைக்கிற எதையும் நடக்க விட்டுடாத. அப்புறம் இவள எல்லாம் கையால இல்ல, கண்ணால கூட பார்க்க முடியாது” என்று தனக்குத் தானே அழுத்தமாய் சொல்லியவன் அவளைப் பார்த்தப்படியே, தன் உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்றான்.
அவன் உள்ளே சென்றதும் இங்கே கண்ணைத் திறந்தவளோ, “உங்க தங்கச்சிக்கும், உங்களுக்கும் இருக்கிற பிடிவாதத்த விட எனக்கு பிடிவாதம் ஜாஸ்தி வேந்தன் சார்” என்று அழுத்தமாய் சொல்லிக் கொண்டு மீண்டும் கண் மூடியிருந்தாள்.
உடை மாற்றி வந்தவனோ, வழக்கம் போல், உறக்கம் வரும் வரை, அவளையேத்தான் விழி எடுக்காது பார்த்தான். அவள் முகத்தைத் தவிர வேறு எதையும் பாக்கவே முடியாத அளவுக்கு பெட்சீட்டை கழுத்து வரை மூடிக் கொண்டு படுத்திருந்தாள்.
அதில் பெருமூச்சு ஒன்றை விட்டவன், “உன் பொண்டாட்டிக்கு உன் மேல எவ்வளவு நம்பிக்க பார்த்தீயா?” என்று நக்கலாய் சொல்லியவன், இப்போது அவள் அந்த அழகு முகத்தைத்தான் இமைக்காதுப் பார்த்தான்.
“புதுசா கல்யாணம் ஆகி முத பொறந்த நாள். ஆசையா பொண்டாட்டிய கட்டிப் புடிச்சு தூங்கலாம்னா, நான் கிட்டப் போனாலே, ஏதோ ட்ரான்ஸ்பார்ம்ல கைய வச்ச மாதிரி கத்துறா. ம்ஹூம் வேந்தா. உனக்கு வாய்ச்சது இவ்வளவுத்தேன். அவ முழிக்கிறதுக்குள்ள அமைதியா படுத்துடு. இல்லன்னா, உனக்கு பார்க்க கூட வாய்ப்பு கொடுக்காம, அவ எந்திரிச்சு போயிடுவா” என்று தனக்குத் தானே முனுமுனுத்தப்படி கட்டிலில் படுத்து விழி மூடினான் சுடர் வேந்தன்.
அவன் உறங்கியதும் மெதுவாய் விழியை திறந்த கவிக்கோ, அவன் புலம்பியதைக் கேட்டு ஏனோ மென் புன்னகை எட்டிப் பார்த்தது.
“பொண்டாட்டிய கட்டிப் பிடிச்சு தூங்கனும்னா, கல்யாணம் மட்டும் இல்ல. பொண்டாட்டியும் புதுசா இருக்கனும். உங்கள யாரு என்னை வந்து கட்டிக்க சொன்னது. உங்க தங்கச்சி சொன்னான்னு, கல்யாணம் பண்ணா அனுபவிச்சித்துத்தான் ஆகனும்” என்றவளுக்கு அவனின் மீது மெல்லிய பரிதாபமும் எட்டிப் பார்த்தது. ஆனால் அவளின் மனமோ, “அடுத்தவங்கள பார்த்து பரிதாபப்படுற நிலையிலையா நீ இருக்க? அதுவும் போக, இது அவரா தேடிகிட்டது. அவர் பிடிவாதத்த விட்டு, உன்னை விட்டுட்டாலே, அவர் ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிப்பாரு. அதுக்கப்புறம் அவர் வாழ்க்க சரியாகிடும்” என்று மனசாட்சி சொல்ல, “அதுவும் சரித்தான். எப்படியாச்சும் இவர் மனச மாத்தி, நம்ம இங்க இருந்து போயிடனும்” என்று ஏதேதோ யோசித்தப்படி கண்ணை மூடினாள் கவி.
ஆனால் அவள் ஒன்றை யோசிக்கவே இல்லை. அவனை விட்டு செல்ல என்ன வழி? என்று இத்தனை யோசிக்கிறாளே. ஒரே ஒரு முறை அவனுடன் வாழ என்ன வழி? என்று யோசித்தால், வேந்தனின் வாழ்க்கை மட்டும் அல்லாது அவளின் வாழ்க்கையுமே நன்றாக இருக்கும். ஆனால் அதை அவள் யோசிக்க மாட்டாள். இப்போது இல்லை, எப்போதுமே அவள் அதை யோசித்தது இல்லை. இனியாவது யோசிப்பாளா? பதில் காலத்தின் கையில்…
அடுத்த நாள் காலை வேந்தன் எழும் போது அறையில் கவி இல்லை. ஆனால் அவனுக்கான காபி டேபிளில் இருந்தது. ஏனோ நேற்று போல், அதை அவன் ஒதுக்கவெல்லாம் இல்லை. ஏனெனில் நேற்று இரவு குடித்ததன் விளைவில் காலையிலேயே தலை பயங்கரமாக வலித்தது.
காபி குடித்துக் கொண்டிருந்தவனின், மொபைலுக்கு அவனுடைய பிஏ அருள் கால் செய்தான்.
அப்போதே மணியைப் பார்த்தான். இன்று அவனுடைய பிறந்த நாள். எப்படியும் அவனுடைய தொகுதி மக்களுக்கு இனிப்பும், உடையும் வழங்க அவன் செல்ல வேண்டும். அங்கிருக்கும் கோவில் ஒன்றில் சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். என்னத்தான் அவனின் மீது கோவமாகவே இருந்தாலும், அவனுடைய அம்மா, எப்படியும் ஊரில் உள்ளவர்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்திருப்பார். தங்கையைப் பற்றி சொல்லவே வேண்டாம். எப்போதுமே முதல் வாழ்த்து அவளுடையதுத்தான். தனக்காக கோவில் சென்று வந்திருப்பாள். இதெல்லாமே வழக்கமாய் நடப்பது தான். ஆனால் ஏனோ மனம் தன்னவளின் ஒற்றை வாழ்த்துக்காக ஏங்கியது.
“ஏண்டா? நேத்து நீ கம்முன்னு இருந்திருந்தாக் கூட அவ உனக்கு பார்மலா விஷ் பண்ணியிருப்பா. நீ பண்ணி வச்ச வேலைக்கு, இன்னும் ஒரு வாரத்துக்கு உன் கண்ணுலையே பட மாட்டா” என்று மனசாட்சி உண்மையை சொல்லியது.
அது உண்மை என்று தெரிந்தும் கூட மனம் அவளைப் பார்க்க ஆசைப்பட்டது. ஆனால் வலுக்கட்டாயமாய் அவளை சென்று பார்க்க மனம் வரவில்லை. அதனால் அமைதியாய் குளித்து முடித்து, வெள்ளை வேஷ்டி சட்டையில் கம்பீர நடையுடன் கீழே வந்தான்.
மீண்டும் அவனின் விழிகள் அந்த ஹாலை சுற்ற, அதைப் பார்த்த செல்லம்மாவோ, “அம்மா, சமையல்கட்டுல இருக்காங்கய்யா” என்றார்.
அப்போதே நேற்று அவரிடம் கோவமாய் பேசியதும் நினைவு வர, “ம் சரி பாத்துக்கோங்க” என்று சொல்லியவன் பின், “அப்புறம் நேத்து ஏதோ” என்றவனுக்கு உண்மையிலேயே வருத்தம் தான்.
“பரவாயில்ல தம்பி. நானும் அப்படி பேசியிருக்க கூடாது. பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்றார்.
தன் பிறந்த நாளை, தன் தாயைப் போல, தான் சொல்லாமலே ஞாபகம் வைத்து வாழ்த்தும் அவரும் அவனுக்கு ஒரு அன்னைப் போல் தான். அந்த உரிமையில் தான் சில நேரம் தன் கோவத்தை காட்டி விடுவான்.
இப்போதும் சிறு புன்னகையுடன், “அருள்” என்று சத்தமாய் அழைக்க, வாசலில் நின்றிருந்தவன் அடுத்த நொடி அவனின் முன்னே நின்றான்.
அவனின் குரலில், சமையல்கட்டிற்குள் நின்றிருந்தவளின் உடல் ஒரு நொடி அதிர்ந்து பின் சகஜ நிலைக்கு வந்தது.
உயிரை உருக்கும் அவன் குரல். அவள் செவியை மட்டும் அல்லாது, அவள் இதயத்தையும் உழுப்பி விடும். அந்தக் குரல், அந்த குரல் மட்டுமே அவளுக்குப் போதும். அந்த குரலுக்கு சொந்தமானவனை எப்போதுமே அவள் வேண்டும் என்று நினைக்கவில்லை. நினைக்கவும் போவதில்லை.
“வீட்டுல வேலைப் பார்க்கிறவங்க எல்லாருக்கும் ஒரு மாச சம்பளத்தோடு சேர்த்து கொடுகக் சொன்னேன்னே” என்றான்.
“எல்லாம் ரெடி சார்” என்றவன் சோபாவில் வைக்கப்பட்டிருந்த கவரைப் பார்த்தான். அதில் சென்று, ஒன்றை எடுத்து வந்து செல்லம்மாவிடம் கொடுத்தான்.
“நல்லா இருக்கனும் தம்பி” என்றார். “கண்டிப்பாம்மா” என்றவன், மீதி அனைவருக்கும் அருளை கொடுக்க கூறினான். மனைவியுடன் சேர்ந்து கொடுக்க அவனுக்கும் ஆசைத்தான். ஆனால் எங்கே அவள் நிச்சயம் அவன் கிளம்பும் வரை வெளியில் வர மாட்டாள் என்று தெரியும். அதனால் மீண்டும் ஒரு முறை கிச்சனைப் பார்த்து விட்டு, அருளுடன் வெளியேறினான்.
வீட்டிற்குள் இருக்கும் வரைத்தான் வேந்தனின் முகத்தில் மென்மை இருக்கும். வெளியில் எல்லாம் அவன் அத்தனை இறுக்கமானவன். அத்தனை எளிதில் உணர்ச்சிகளை காட்டி விட மாட்டான். புன்னகை மட்டும் அவன் முகத்தில் இருக்கும். ஆனால் அது எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கும். கட்சி ஆட்கள் எல்லாம் கையில் பொக்கேவோடு வந்திருந்தனர்.
அதைப் பார்த்த வேந்தனோ அருளை முறைத்தான். “வீட்டுக்கு யாரும் வரக் கூடாதுன்னு சொல்லிருக்கேன்த்தான” என்று சிறு கோவத்துடன் கூறினான்.
“மந்திரியே அனுப்பியிருக்காங்க சார்” என்று அவன் சொல்ல, “யாரா இருந்தாலும், இது தான் பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட். இங்க கட்சி சம்பந்தப்பட்டவங்க மட்டும் இல்ல. என்னோட பர்மிஷன் இல்லாம யாரும் வரக் கூடாது” என்று அழுத்தம் திருத்தமாய் சொல்லிவிட்டு அவர்களிடம் புன்னகையுடனே பேசிவிட்டு காரில் ஏறினான். ஏறும் நொடி கூட மனம் கவியைத் தேடியது. உள்ளே பார்த்தான். ம்ஹூம் அவள் தெரியவே இல்லை. அதில் மீண்டும் தலையைக் கோதி கவனத்தை திசைத் திருப்பி காரில் ஏறி கிளம்பியிருந்தான் வேந்தன்.
(ஆனாலும் இந்தப் புள்ள ரொம்ப ஓவராத்தான்யா போகுது. சரி அடுத்து என்னத்தான் ஆகப் போதுன்னு அடுத்தடுத்த எபிசோட்ல பாக்கலாம். அதுக்கு முன்னாடி இன்னிக்கு எபிசோட்ல உங்களுக்கு பிடிச்ச சீன் எதுன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. அப்படியே எப்பவும் போல லைக் பண்ணிட்டு உங்க பிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணுங்க)
தித்திக்குமா?..
Shree Ram
happy birthday vendhan🎂💐💐💐💐💐💐